தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசாணை வெளியான நிலையில், அப்பகுதியினரும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டினப்பாக்கத்தில் கைவிடப்பட்டது.இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வரும் பல்லவன் இல்லம், 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. புதிய தலைமைச் செயலகத்துக்கான போதுமான இடமாக இருப்பதால், கூடுதலாகக் கையகப்படுத்தும் தேவை இருக்காது. மேலும், பல்லவன் இல்லத்துக்கு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளும் இருப்பதால் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி, தற்போது இங்கு செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை சென்னை புறநகர் பேருந்து நிலையத்துக்கு (கோயம்பேடு) மாற்றப்படலாம்.இருப்பினும், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை மட்டுமே இருப்பதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.Is a new secretariat being set up at Pallavan House?