மனைவி சாக்‌ஷியை ஏமாற்றிய தோனி!

Wait 5 sec.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் விளையாடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.குஜராத்தின் ஜாம்நகரில் தொழிலதிபர் அம்பானி குடும்பத்தின் சார்பில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, இயக்குநர் அட்லீ, கீர்த்தி சனோன், வருண் தவான், டைகர் ஷெராஃப், மௌனி ராய், ஷாகித் கபூர், திஷா பதானி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.ரிலையன்ஸ் கிரீன்ஸ் டவுன்ஷிப்பில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ். தோனியுடன் அவருடைய மனைவி சாக்‌ஷியும் கலந்துகொண்டு ராட்டினம் உள்ளிட்ட சவாரிகளிலும் விளையாடினர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்றோருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.விழாவின்போது, தனது மனைவி சாக்‌ஷிக்கு தோனி ஐஸ் கிரீம் ஊட்டி விடுவதுபோல ஏமாற்றும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காதல் தம்பதியான தோனி - சாக்‌ஷியின் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.MS Dhoni’s Playfully Moment With his Wife Sakshi