‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும்’ - மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சியின் நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷூக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்த நிலையில், ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.அவர்கள் மூவரையும் இன்று காலையில் தில்லி போலீசார், தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சௌரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா இவரும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அஜிங்கியா ஷிண்டே பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு விடுவிக்கப்பட்டர்.இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்காவுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “இந்த (பாஜக) அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? பாஜகவால் எத்தனை இளைஞர்களின் குரல்களை ஒடுக்க முடியும்? சௌரவ் தாஸ், அஷுதோஷூக்கு ஆதரவாக இருப்போம். அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் ஆதரவையும் வழங்க திமுக தயாராக உள்ளது.எவ்வளவு அதிகமான இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ அவ்வளவு அதிக எதிர்ப்பு குரல் எழும்பும். எந்த அரசியல் சார்பும் இல்லாத சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.How many protestors can this government detain? How many young voices can the BJP silence?The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people!Solidarity with… https://t.co/kdVXOdVxZ0 pic.twitter.com/rBPLUJz5J2— M.K.Stalin (@mkstalin) October 14, 2026DMK President M.K. Stalin has posted that the DMK will stand in support of the arrested 'Cockroach Party' functionaries, Sourav Das and Ashutosh.