தட்டாஞ்சாவடி எம்எல்ஏவாக பதவியேற்றார் அசோக் ஆனந்த்!

Wait 5 sec.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்த், இன்று (அக். 14) எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலகத்தில் முதல்வர் என். ரங்கசாமி முன்னிலையில் தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏவாக பதவியேற்ற அசோக் ஆனந்திற்கு முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து கடந்த அக். 6 அன்று நடைபெற்ற புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ. அசோக் ஆனந்த் போட்டியிட்டு 13,358 வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். முதல்வா் ரங்கசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் 3.334 கூடுதலாகப் பெற்றுள்ளார் அசோக் ஆனந்த். காங்கிரஸ் வேட்பாளா் விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். Ashok Anand sworn in as Puducherry Thattanchavady MLA3-வது நாளாக தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் (அக். 14)