இந்த வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் நேற்று (அக். 13) உயர்வுடன் முடிந்தன. தொடர்ந்து இன்று (அக். 14) காலை பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது மீண்டு வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,049.76 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 33.73 புள்ளிகள் உயர்ந்து 73,067.51 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.75 புள்ளிகள் குறைந்து 22,711.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிஎஸ்இ ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.27 சதவீதம், 0.16 சதவீதம் சரிந்தன.துறைவாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு மிகவும் சரிந்தது. அதே நேரத்தில் நிஃப்டி ஐடி பங்குகள் கணிசமாக உயர்ந்தன. இத்துடன் மீடியா, எஃப்எம்சிஜி பங்குகளும் உயர்ந்தன. சென்செக்ஸ் 30 பங்குகளில் 10 பங்குகள் உயர்ந்தும் மற்றவை சரிந்து வர்த்தகமாகின்றன. நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் இன்று பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி வர்த்தகமாகிறது. வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.75 ஆக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 107 டாலராக உள்ளது. Stock Market Updates: Sensex, Nifty trade flat; IT, FMCG gain3-வது நாளாக தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் (அக். 14)