சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

Wait 5 sec.

அதிமுகவில் தலைமையை எதிா்த்து தொடா்ந்து விமா்சித்துவரும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு பதிலடி தரும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அவரது ஆதரவாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மூன்றாமிடம் பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகளை விமா்சித்து தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனா். மேலும், சில அதிமுக எம்எல்ஏ-க்களும் அவா்களைச் சந்தித்துவருகின்றனா்.இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்களான ஒன்றியச் செயலா்கள் முதல் கிளைச் செயலா்கள் வரையிலான நூற்றுக்கும் மேற்பட்டோரை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.