நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் ஆர்வம் காரணமாக தென்னிந்திய அளவில் இப்படத்திற்கு பெரிய வணிகம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மேலும், இப்படத்திற்கு சராசரிக்கும் மேல் என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ், “ஜெயிலர் - 2 கண்டிப்பா கண்டிப்பாக கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். பிளாக்பஸ்டர். தலைவர் ரசிகர்களுக்கு பெரிய விருந்து” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன்: “டபுள் பிளாஸ்ட்... இன்றைக்கும் என்றைக்கும் ஒரே தலைவர்தான்.” நடிகர் விஷ்ணு விஷால்: அண்மை காலங்களில் இவ்வளவு விசில் அடித்து பார்த்த தமிழ் சினிமா இதுதான். தலைவரிடமிருந்து முழுமையான விருந்து. ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன். 50 ஆண்டுகளாக ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்!இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். தலைவர் மீதிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை. சிலிர்ப்பாக இருந்தது. லவ் யூ தலைவா! இயக்குநர் நெல்சனின் எழுத்தும் உருவாக்கமும் சிறப்பாக இருந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற தலைவர் ரஜினிகாந்த்தை வாழ்த்துகிறேன். வாழ்த்துகள் நெல்சன். ரஜினியின் ஜெயிலர் 2! 'விசில்கள்' பறக்கும் திரையரங்குகள்! - திரை விமர்சனம்Celebrities from the film industry are praising actor Rajinikanth's Jailer 2.