பட்டாசு தொழிலாளி வீட்டில்நகை, பணம் திருட்டு

Wait 5 sec.

சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்தவா் ஜான்சிராணி (42). பட்டாசுத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டாா். பின்னா், மாலையில் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவி திறந்து கிடந்தது. இதையடுத்து, வீட்டுக்குள் சென்று லாக்கரில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 55 ஆயிரம் ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.