தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டுக்கு முழுநேர ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில் ஆர்.வி. ஆர்லேகரை தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நியமித்து உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதையடுத்து ஆளுநருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் முதல்வர் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் விஜய் சென்றார். அவர் ஆளுநர் ஆர்லேகரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும், தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்தும் ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. Chief Minister Vijay meets Governor R.V. Arlekarஅரிசி விலை உயர்வுக்கு இதுதான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன்