எம்எல்எஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது. நியூ யார்க் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்டர் மியாமி அணி ஜூலைக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமியின் ரோட்ரிகோ டி பால் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் நியூ யார்க் சிட்டி உடன் இன்று காலை மோதியது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமியின் ஜெர்மன் பெர்டெராமே 20ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் மெஸ்ஸி அசிஸ்ட்டில் 45+5ஆவது நிமிஷத்தில் ரோட்ரிகோ டி பால் கோல் அடித்தார். முதல் பாதியில் 2-0 என இன்டர் மியாமி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் நியூ யார்க் அணி எவ்வளவு முயன்றும் கோல் அடிக்கவில்லை. இறுதிக்கட்ட நேரத்தில் பெனால்டியில் கோல் அடிக்கவும் தவறியது. இறுதியில் இன்டர் மியாமி 2-0 என வென்றது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்டர் மியாமி அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடியதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த வெற்றியுடன் இன்டர் மியாமி அணி எம்எல்எஸ் 2026 கோப்பைக்கான பிளே ஆப்ஸுக்குத் தகுதி பெற்றது. கிழக்கு மற்றும் மேற்கு கான்பிரன்ஸ் பிரிவுகளில் தலா 9 அணிகள் பிளே ஆப்ஸில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி தலைமையில் 2024 கோப்பையை தவறவிட்ட இன்டர் மியாமிக்கு 2025ல் முதல்முறையாக கோப்பை கிடைத்தது. தற்போது, மீண்டும் கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. PLAYOFFS SECURED! ✅ ¡Vamos por más! https://t.co/lJL2vYRDqD pic.twitter.com/8OORwZjawd— Inter Miami CF (@InterMiamiCF) October 15, 2026ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்! Messi assists as Inter Miami clinches MLS playoff berth with 2-0 win over NYCFC