த்ரில்லர் படத்தை விஞ்சிய ரியல் மாட்ரிட்..! கடைசி 7 நிமிஷத்தில் 3 கோல்கள்!

Wait 5 sec.

சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரோமா அணியை கடைசி நிமிஷத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 59ஆவது நிமிஷத்தில் வினிசியஸுக்குப் பதிலாக களமிறங்கிய என்ட்ரிக் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.இத்தாலியின் மிகப்பெரிய கால்பந்துத் திடலில் ஒன்றான ஸ்டேடியோ ஒலிம்பிகோ இந்தப் போட்டி நடைபெற்றது. ரோமா தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. இந்தப் போட்டியில் 20ஆவது நிமிஷத்தில் ரோமாவின் மார்டின் டி ரூன் கோல் அடிக்க, எம்பாபே 25ஆவது நிமிஷத்தில் சமன் செய்தார். முதல் பாதி 1-1 என முடிவடைந்தது. இரண்டாம் பாதியில் 51, 57ஆவது நிமிஷங்களில் ரோமாவின் டோனியல் மலேன் கோல் அடித்து 3-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.பின்னர், சில மாற்று வீரர்களைக் களமிறக்கியது ரியல் மாட்ரிட். 83, 85, 90ஆவது நிமிஷங்களில் முறையே கார்லோஸ் எஸ்பி, என்ட்ரிக், ரூடிகர் கோல் அடித்தார்கள். இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் அதிக முறை (15) சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.Hasta el final. Lo decimos en serio pic.twitter.com/42mUrfdreU— Real Madrid C.F. (@realmadrid) October 15, 2026மெஸ்ஸி அசிஸ்ட், ரோட்ரிகோ அசத்தல்: பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றது இன்டர் மியாமி!Real Madrid beat roma in final 7 minutes 3 goals, absolute cinema in champions league