மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்கும் வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கான ஏலம் கொச்சியில் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த வீராங்கனைகளுக்கான அதிகாரபூர்வ பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. News #TATAWPLAuction 2027 Player List announced!The player auction will see 146 players competing for 27 available slots Kochi⏰ October 28, 5.30 PM IST More details | #TATAWPL https://t.co/GKfyOO1Kar— Women's Premier League (WPL) (@wplt20) October 19, 202627 இடங்களுக்காக நடத்தப்படும் ஏலத்தில் 146 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில் 119 இந்திய வீராங்கனைகள் மற்றும் 27 வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்குவர்.சோஃபியா டுங்லி மற்றும் சோபி மோலினக்ஸ் இருவரும் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ஜி. கமலினி, கிரன் நவ்கிர், ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனஸன் ரூ. 40 லட்சம் அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.ரூ.30 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் 30 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.The list of players participating in the Women's Premier League auction has been released.இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்!