நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்: சிஜேபி சட்டக்குழு

Wait 5 sec.

சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட விவகாரத்தில் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம் என அந்தக் கட்சியின் சட்டத் தலைவர் ரத்னா சிங் திங்கள்கிழமை (அக். 19) தெரிவித்தார்.அக். 13 ஆம் தேதி ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா இருவரையும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.இந்த ஐந்து நாள் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், அவர்கள் இருவருக்கும் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரத்னா சிங் பேசியதாவது:அவர்களின் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வந்ததால், இறுதி வாதங்களைக் கேட்பதற்காக இன்று நாங்கள் நீதிமன்றத்துக்கு வந்தோம். தேவையான அனைத்து சட்ட ஆவணங்களையும் நாங்கள் சமர்ப்பித்தோம். ஆனால், எங்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்தார். ஏற்கெனவே, அவர்கள் நீதிமன்றத்தில் ஐந்து நாள்களைக் கழித்துவிட்டனர். அவர்கள் இருவரின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. நீதிமன்ற அமைப்பு தோல்வி அடைந்துவிட்டது. நாங்கள் உயர் நீதிமன்றங்களை அணுகுவோம் என்று தெரிவித்தார்.சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!CJP legal chief Ratna Singh said on Monday (Oct. 19) that we will appeal in the High Court against the extension of the judicial custody of CJP leaders Saurav Das and Ashutosh Ranga.