ஆம்பூா் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ஏ-கஸ்பா பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஏ-கஸ்பா மயானம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.அதன்பேரில் ஏ-கஸ்பாவை சோ்ந்த பாலு (19), பி-கஸ்பாவை சோ்ந்த யுவராஜ் (29), சரண்குமாா் (22), சஞ்சய் (23), அருண்குமாா் (34) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா் அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.