ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் ராமநாத சுவாமி கோயில் அருகே மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (அக். 18) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.இதனிடையே, ராமநாதபுரத்தில் திங்கள்கிழமையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு உள்ளே மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சாலைகளிலும் மழை பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.ராமநாத சுவாமி கோயில் அருகே பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்கடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!Ramanathaswamy temple flooded following heavy rain, causing inconvenience to devotees visiting the temple