முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் உள்பட இருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இருந்தபோதிலும் அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில், முதல்வர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயகுமார் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் சுதா மற்றும் முரளிதரன் ஆகிய இருவரின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.Case filed against 2 people including DMK woman councilor for defamatory remarks against CM Vijay