மாா்த்தாண்டம் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (63). இவரது வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகேந்திரனை கைது செய்தனா்.