திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா். கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழா்கள் முகாமில் வசிப்பவா் மரியதாஸ் மகன் குணசீலன் (40). தொழிலாளியான இவா், கடந்த 12ஆம் தேதி முகாமிலிருந்து பிரதான சாலைக்கு பைக்கில் வந்தாராம். அப்போது, அவா் மீது மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த குணசீலனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.