ரூபாய் மதிப்பு தொடர் சரிவு! தள்ளிப்போகும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு!

Wait 5 sec.

இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்த்தப்படும் என மத்திய அரசு கணித்திருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிந்து வருவதால், 5 டிரில்லியன் டாலர் இலக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 93.3 ஆக இருந்த நிலையில், இன்று (அக். 19) ரூ. 94.92 என்ற நிலையில் சரிந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து ரூபாயின் மதிப்பு 5 சதவிகிதத்துக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது.மேலும், 2028 ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சராசரியாக 95.5 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும்நிலையில், இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போகும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, இந்தியா 2026-ல் 4.06 டிரில்லியன் டாலராகவும், 2027-ல் 4.52 டிரில்லியன் டாலராகவும், 2029-ல் 5.54 டிரில்லியன் டாலராகவும் உயரும் என தெரிவித்துள்ளது. ஆனால், 2028 ஆம் ஆண்டிலேயே இந்தியா 5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டி விடும் என மத்திய அரசு கணித்திருந்தது.டேட்டா இல்லாத புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!India's $5 trillion economic target likely to be delayed