இத்தாலியில் உள்ள பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.இத்தாலியின் நகரங்களில் சில நாள்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக, இந்தியத் தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இந்தியக் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூட்டமான இடங்களையும் போராட்டங்கள் நடைபெறும் இடங்களையும் தவிர்க்கவுன், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்த உள்ளூர் செய்திகளைப் பின்பற்றவும் அறிவுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.உதவி தேவைப்படும் இந்தியக் குடிமக்களுக்கான அவசரத் தொடர்பு எண்களையும் இந்தியத் தூதரகம் பகிர்ந்துள்ளது.அவர்கள் ரோமில் உள்ள தூதரகத்தை +39 331 614 2085 என்ற எண்ணிலோ அல்லது மிலனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை +39 3881647527 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.அன்றாட வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், அதற்கு எதிராக பல இத்தாலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மிலன் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், பல கடைகள் சூறையாடப்பட்டு, சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.இந்தப் போராட்டங்கள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜார்ஜியா மெலோனி, “போராட்டம் நடத்துவது ஒரு உரிமை. நகரங்களுக்குத் தீ வைப்பது உரிமையல்ல.இன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒருவர் எந்தக் கொள்கைகளுக்காக போராட்டம் நடத்தினாலும், அதில் பங்கேற்பதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும் அடித்தளம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.அண்டை நாடான பிரான்சிலும் இதே காரணங்களுக்காகவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் குறைகளுக்கு ஆதரவாகவும் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்கு: எலான் மஸ்க் உறுதி!With protests taking place in several cities in Italy, the Indian Embassy has advised Indians there to remain vigilant.