திருவனந்தபுரம்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியது

Wait 5 sec.

திருவனந்தபுரம்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி, திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. ஆஸ்ட்ராஹிந்த்- 5 என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கும், ஆஸ்திரேலிய ராணுவத்துக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை(அக்.19) தொடங்கியது.இந்த பயிற்சி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியாக இது இருக்கும். இந்தப் பயிற்சியால், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவம், ஆஸ்திரேலிய ராணுவம் ஆகியவற்றில் இருந்து தலா சுமார் 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் நான்காவது பதிப்பு, 2025 அக்டோபர் 13 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள இர்வின் படைத்தளத்தில் நடைபெற்றது.இந்திய ராணுவக் குழுவில் கார்வால் ரைபிள்ஸ் படையினரும், பிற படைப்பிரிவுகள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய ராணுவ அணியில் 13 பிரிகேடைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்தப் பயிற்சியின் போது, இரு படைகளின் வீரர்களும் வான், கடல் சார்ந்த அம்சங்கள் உள்பட, யதார்த்தமான கள செயல்பாட்டுச் சூழல்களில் கூட்டுத் திட்டமிடல், பயிற்சிகள், போர் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.தொழில்முறை அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதோடு, கடலோர மற்றும் தீவுச் சூழல்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் உளவு, முக்கிய தளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண அவசரகால நிகழ்வுகளுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும். இந்தப் பயிற்சியில் முதல் முறையாக, நியூசிலாந்திலிருந்து ஒரு பார்வையாளர் குழுவும் பங்கேற்கிறது. The 5th edition of the India-Australia Joint Military Exercise AUSTRAHIND 2026 commenced today at the Foreign Training Nodeநாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்: சிஜேபி சட்டக்குழு