ரயில்களில் செல்போன் ஸ்பீக்கரில் ஆடியோ, வீடியோ பார்ப்பதற்கும் தடை; மீறினால் அபராதத்துடன் தண்டனை: தெற்கு ரயில்வே

Wait 5 sec.

சென்னை: ரயில் பயணங்களின்போது செல்போன் ஸ்பீக்கரில் அதிக ஒலியுடன் ஆடியோ கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ள தெற்கு ரயில்வே, மீறுவோருக்கு ரூ.1000 அபராதத்துடன் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.ரயில் பயணங்களின்போதும், ரயில் நிலையங்களில் இருக்கும்போதும் செல்போன்கள் மூலம் உரத்த குரலில் பேசுவது, அதிக ஒலியுடன் இசை, உரையாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இது அருகில் இருக்கும் இதர பயணிகளுக்கு தொந்தரவாகவும், பயணத்தைச் சீர்குலைப்பதாக இருக்கும் என்பதால், இத்தகைய செயல்களுக்கு ரயில்வே திருத்தச் சட்டத்திற்கு இணங்க அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி தெற்கு ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ செல்போன்கள் மூலம் அதிக ஒலியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்க்கக் கூடாது என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், விதிகளை மீறுவோருக்கு ரயில்வே சட்டப் பிரிவு 145-இன் கீழ் ரூ.1,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.இது குறித்து ரயில் நிலையங்கள், ரயில்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விழிப்புணர்வு வாசகம் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் இருக்கும். ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்குமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.மேலும், சக பயணிகளுக்கு இடையூறு செய்வதைத் தவிர்க்க, தொலைபேசி உரையாடல்களை மிதமான ஒலியளவில் வைத்துக்கொள்ளுமாறும் மற்றும் ஆடியோ கேட்கும்போது அல்லது வீடியோக்களை பார்க்கும்போதும் இயர்போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில் பயணத்தின்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்கள் ரயிலிலிருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ வெளியேற்றப்படலாம் என்று எச்சரித்துள்ள தெற்கு ரயில்வே, மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அபராதம் விதிக்கும் அதிகாரம் ரயிலில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை ரயில் பெட்டியிலிருந்து வெளியேற்றவும் பொதுவான விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பொது இடங்களில் செல்போன்கள் மூலம் உரத்த குரலில் பேசுவது, அதிக ஒலியுடன் இசை, உரையாடல்கள் கேட்பது, வீடியோ பார்ப்பது பகிர்வது தற்போது பெருகி வருவதாகவும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவசியமாக்கியுள்ளது என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.Southern Railway has asked its divisions to sensitise passengers against loud phone conversations and playing music or videos on speaker mode in trainsஇத்தாலி கலவரம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்!