ஏஐஎஸ்ஏ தலைவா் நேஹா போரா விடுப்பு; அபிஜீத் திப்கே கைது: தில்லியில் என்ன நடக்கிறது?

Wait 5 sec.

புது தில்லி: தில்லியில் தடையை மீறி 'தேசிய கொடி ஏற்றும்'போராட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்க முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே, அகில இந்திய மாணவா் சங்க (ஏஐஎஸ்ஏ) தலைவா் நேஹா போரா உள்பட 150-க்கும் மேற்பட்டோரை தில்லி காவல்துறையினா் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த நிலையில், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவரான நேஹா போரா சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டார். அதே சமயம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த இருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.வாக்காளா் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி, ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் எதிா்க்கட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக தில்லியில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த 10-ஆம் தேதி சிஜேபி இயக்கத்தினா் நடத்திய போராட்டங்களால் மத்திய தில்லி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, போராட ஒதுக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் இருந்து ஜந்தா் மந்தரை நீக்கி தில்லி காவல்துறை ஆணையா் அனுராக் குமாா் அண்மையில் உத்தரவிட்டாா். அதையும் மீறி ஜந்தா் பகுதியில் அத்துமீறி நுழைந்து தேசிய கொடி ஏற்ற முயன்ற சிஜேபி நிா்வாகிகள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் கைது செய்யப்பட்டு திஹாா் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.இதனிடையே, ஜந்தா் மந்தரில் இருந்து சுமாா் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை தேசிய கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்குமாறு சிஜேபி நிறுவனா் தனது ஆதரவாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.இந்த நிலையில், ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகலில் புறப்பட்ட அபிஜீத் தீப்கேவும், மண்டி ஹவுஸில் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நேஹா போராவையும் காவல்துறையினா் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.இதனிடையே, தில்லி காவல் சட்டத்தின் 65-வது பிரிவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நேஹா போரா, அதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டார். அதே சமயம், அபிஜீத் தீப்கே மீது பிஎன்எஸ்எஸ் 126 மற்றும் 170-வது பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் சனிக்கிழமை பிற்பகல் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அகில இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டுமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேஹா போராவை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி கைது செய்து தில்லியின் பல்வேறு இடங்களுக்கு ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக அழைத்துச் சென்றதாகவும், நேஹா போராவை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவு வரை தில்லி காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், இறுதியாக ஆர்.கே. புரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக அவரது வழக்குரைஞர்கள் நள்ளிரவில் ஆர்.கே. புரம் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அவர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுத்திவிட்டனர். அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது குறித்தும் காவல்துறையினர் தகவல் அளிக்கவில்லை என்றும், கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேஹா போராவுக்கு தேவையான மருந்துகளை வழங்கவும் மறுத்துவிட்டனர் என்றும் அகில இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நான் என்ன சொல்வது? காவலில் இருந்து வெளியே வரும் காணொளியே ஏஎன்ஐ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த காணொளியில் அவருடன் ஐந்து பேர் உடன் செல்வது தெரிகிறது. அப்போது, செய்தியாளர்களிடம், நான் என்ன சொல்வது? என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் நேஹா போரா.கூடுதல் பாதுகாப்புசட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் சுமார் 150 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியும் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு விரைவு அதிரடிப் படையினர் பணியமர்த்தப்பட்டிருப்பதுடன், கூடுதல் பாதுகாப்புப் படையினரும் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். All India Students' Association (AISA) president Neha Bora was released early Saturday morning,இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை