தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். கானா பாடல்களைப் படுவதில் வல்லவரான இவர் மாட்டுக்கார மன்னாரு திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகம் ஆனார். அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்தவர். விஜய், அஜீத் ஆகியோரின் ஆரம்பக்கால வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்பட இசைக்கு மகத்தான பங்களிப்பு அளித்தவர். கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்தவர் தேவா. இசைத் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.