தில்லி மெட்ரோ முடக்கம்! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காவல் ஆணையர்!

Wait 5 sec.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதற்காக தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி சார்பில் அக்டோபர் 10 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் மூட தில்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.இதுதொடர்பாக அக். 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ ரயில் சேவைகள் இடையூறின்றி இயக்கப்பட வேண்டும், இணைய சேவைகள் தடையின்றி செயல்பட வேண்டும், அமைதியாக போராடுபவர்களை தடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.ஆனால், அக். 10 ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் பிரமாணப் பத்திரங்களை இன்று தாக்கல் செய்தார்.அதில், வேண்டுமென்றோ, திட்டமிட்டோ நீதிமன்ற உத்தரவுகளை மீறவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.மேலும், பிஎன்எஸ் 163 அமலில் இருந்த பகுதிகளில் மட்டுமே, போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு சூடான தரமான உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டு முதல் ஆறு மணி நேரத்துக்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Delhi Metro clodsed - Police Commissioner tenders an unconditional apologyராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!