அம்பத்தூரில் தரவு மையம்! அன்னாசிப் பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்! பின்னணி என்ன?

Wait 5 sec.

சென்னையில் சிங்கப்பூர் நிறுவனத்தின் தரவு மையத்தை இன்று திறந்து வைத்த முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் அன்னாசிப் பழங்களை உருட்டிவிட்டனர்.இதனைப் பார்த்ததும் பலருக்கும், அது என்ன அன்னாசிப் பழங்களை உருட்டி விடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சிங்கப்பூர் நாட்டின் நம்பிக்கை மற்றும் பாரம்பரியம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை, அம்பத்தூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை அமைத்துள்ளது. இந்த தரவு மையம் சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர்.இந்த நிகழ்வின்போது, முதல்வர் விஜய் - சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங் இணைந்து அன்னாசிப் பழங்களை தரையில் உருட்டிவிட்டனர்.சிங்கப்பூரில், புதிதாக வீடு அல்லது வணிக நிறுவனங்களை திறக்கும்போது, அந்நாட்டின் ஃபெங் சுய் முறைப்படி அன்னாசிப் பழங்களை உருட்டிவிடுவார்களாம். நாம் வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவது போல அந்த நாட்டின் பாரம்பரியம் இது. இவ்வாறு செய்வதால் வீடு அல்லது வணிக நிறுவனங்களில் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு வளரும் என்பது நம்பிக்கை. அது ஏன் அன்னாசி பழம் என்று கேட்டால், ஆங் லாய் என்பது அன்னாசிப் பழத்தின் பெயர், இதற்கு செல்வம் தேடி வரும் என்று ஒரு பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, 4 ஏக்கர் பரப்பளவில் 7 அடுக்கு மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள தரவு மையத்தை முதல்வர் விஜய்யும், சிங்கப்பூர் துணை பிரதமரும் சுற்றிப் பார்த்தனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த தரவு மையத்தை சிங்கப்பூர் நிறுவனம் இன்று திறந்து வைத்துள்ளது.