குமாரபாளையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 32 வயது இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், வடமாநில இளைஞா்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, உதவி ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் பள்ளிபாளையம் சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைச் சோதனை செய்து வந்தனா். அப்போது, அங்குள்ள உணவகம் முன் சந்தேகத்துக்கிடமாக நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.விசாரணையில், அவா் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (32) என்பதும், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.இதையடுத்து, 20 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், சந்திரசேகரை கைது செய்தனா்.