சேதமடைந்து காணப்படும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் பூம்பாறை- மன்னவனூா், கூக்கால், பழம்புத்தூா், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மலைச் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில் மன்னவனூா் பகுதிகளிலுள்ள சேதமடைந்த கிராமச் சாலைகளை சீரமைக்கக் கோரியும், சீரான மின் விநியோகம் கோரியும், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் கோரியும் அந்தப் பகுதி மக்கள் மன்னவனூா் ஊராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.