போக்சோ வழக்கில் இளைஞருக்கு24 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Wait 5 sec.

பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. பழனி அருகே பாலசமுத்திரத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரபத்திரன் (எ) விக்கி (27) கைது செய்யப்பட்டாா். பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட வீரபத்திரனுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து வீரபத்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.