ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்!

Wait 5 sec.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்.18ஆம் தேதி கெபெர்காவில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்குப் பதிலாக மேத்திவ் பிரீட்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக டோனி டீ ஜொர்ஸி அணியில் இடம்பெறசில்லை எனவும், விக்கெட் கீப்பராக ரியான் ரிக்கெல்டன் செயல்படுவார் எனவும் ’கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா’ தெரிவித்துள்ளது. 2ஆவது போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா, மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, அன்ரிச் நார்கே, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி அக்.18, மூன்றாவது போட்டி அக்.27ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. Dafabet Second Test Match Squad Announcement The South Africa Men’s selection panel has today named a 17-player squad for the second Dafabet Test against Australia, starting on Sunday, 18 October at Dafabet St George’s Park in Gqeberha.There is one change to the squad from… pic.twitter.com/652ms9i8Rp— Proteas Men (@ProteasMenCSA) October 15, 2026ஆட்ட நாயகன் விருதுகள் கூடுதல் எடையுடன் இருப்பதால் வீடு திரும்புவதில் பிரச்னை: ஷாய் ஹோப் Second Test against Australia: Change in the South African team!