மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக். 15) காலை வினாடிக்கு 696 கன அடியிலிருந்து 677 கன அடியாக குறைந்தது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 59.13 அடியிலிருந்து 58.36 அடியாக சரிந்தது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 23.48 டிஎம்சியாக உள்ளது.The inflow of water into the Mettur Dam decreased from 696 cubic feet per second to 677 cubic feet per second this morning (Oct. 15).