பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணரான நவநீதம் 'நவி' பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களின் பெருமையையும் பறைசாற்றும் வகையில், நவநீதம் நவி பிள்ளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி உரையாடலில்... நீங்க தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உங்கள் குடும்பத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. உங்களின் தமிழ் அடையாளம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்திருக்கிறது?நான் மன்னிப்புடன் தொடங்க விரும்புகிறேன். என்னுடைய பெற்றோர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது. என்னுடைய தந்தைவழித் தாத்தா மதுரைக்கு அருகிலுள்ள வத்தலக்குண்டைச் சேர்ந்தவர். அவர்கள்தான் என் குடும்பத்தின் வேர்கள். அவர்களுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருப்பதாக உணர்கிறேன். உலகம் முழுவதும் நடக்கும் போர்களில் உங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய விஷயம் என்ன?ஆயுதச் சண்டைகளும் போர்களும் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. என் சொந்த நகரமான கேப் டவுனில்கூட பார்க்கிறோம். திருட்டுக் கும்பல்கள் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. வீடுகளிலும் போர்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறையும் பெரும் கவலை தருகிறது.இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், தமிழ் குடும்பங்கள் நீதி கிடைக்குமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?உள்நாட்டுப் போரில் தங்கள் விருப்பத்துக்குரியவர்களுக்கு என்னவாயிற்று என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராக இருந்தபோது, நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். இந்த உலகம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறது. அவர்களுக்கென்று தனி நாடு கோரிக்கை விடுத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு நீதி வேண்டினாலும் சரி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவான சூழலை உறுதி செய்வதே இதற்கான ஒரே தீர்வு.SPEAKING about the role of the international community in ensuring justice for the Tamils affected by the civil war in Sri Lanka, this year’s Nobel Peace Prize winner Navanethem ‘Navi’ Pillay strongly advocated for the global community to sustain a supportive environment for the affected people.