தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு! அக். 15 நிலவரம்

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120 -க்கு விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 960 குறைந்தது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 280, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 760 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.இன்றைய தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 15, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,120 -க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,515 -க்கும் விற்பனையாகிறது.கடந்த 4 நாள்களில் தங்கம் விலை ரூ. 2,920 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.Gold and silver rate today in chennai, Tamilnadu