தசராவை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் இடையே போத்தனூா் வழித்தடத்தில் ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தசராவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (அக்டோபா் 17) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - மங்களூரு ஒரு வழிச் சிறப்பு ரயில் (எண்: 06036) மறுநாள் இரவு 7.45 மணிக்கு மங்களூரு நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, பையனூா், கண்ணூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.