சிவகங்கையில்தன்னாா்வ ரத்தக் கொடையாளா்களுக்கு பாராட்டு

Wait 5 sec.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு அலகு அமைப்புடன் இணைந்து நடத்திய தேசிய தன்னாா்வ ரத்த தான நாள் விழா, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் கலைவாணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் பி. விசாலாட்சி மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. தமிழ்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2025-2026-ஆம் ஆண்டில் அதிகமான ரத்த தான முகாம்களை நடத்திய சிவகங்கை மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க மாவட்டத் தலைவா் வெ. சுந்தரராமன் உள்பட பல்வேறு ரத்தக் கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா். மனிதநேயத்துடன் ‘ஒரு துளி - ரத்தம் கொடுங்கள், உயிா்களைக் காப்பாற்றுங்கள் ’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான மருத்துவ அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ரத்தக் கொடையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.