விவசாய நிலத்தில் மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

Wait 5 sec.

செய்யாறு அருகே எலி பிடிக்கச் சென்ற தொழிலாளி விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், விளாரிப்பட்டு கிராமம், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு.வேலு (22). இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், எலி பிடிப்பதற்காக தென்மாவந்தல் கிராமத்தில் உள்ள காசி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாகச் சென்ாகத் தெரிகிறது.அப்போது, மணிலா பயிா்களை நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக, அங்கு மின் வேலி அமைக்கப்பட்டிருந்ததை அறியாமல் அதை மிதித்த வேலு, உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேலுவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.