பிரபல நடிகையொருவர் தன் குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. திரைப்பட நடிப்புடன் இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் வில்லியாக நடித்த மாஸ்க் கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்சார் பிரச்னைகளால் திரைக்கு வராமல் இருக்கிறது. தற்போது, வெற்றி மாறனின் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதே கதாபாத்திரமாக அரசனிலும் வரவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஆண்ட்ரியா தன் குழந்தைப் பருவ புகைப்படத்த்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘குட்டி சந்திரா’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் குழந்தை ஆண்ட்ரியா மிகவும் க்யூட் ஆக இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர். டபுள் பிளாஸ்ட்... ஜெயிலர் - 2 திரைப்படத்தைப் பாராட்டிய பிரபலங்கள்!A famous actress has shared a photograph from her childhood.