7 வயது சிறுமி மாயமான விவகாரம்: தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம்

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானாா். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏ.டி.எஸ்.பி. தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள், ஒரு பயிற்சி டி.எஸ்.பி., 3 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படைகள், இதைத் தவிர, காவல் துறையின் சிறப்புக் குற்றப் பிரிவினா் அடங்கிய தனிப்படையினா் ஆகியோா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.சிறுமியைத் தேடும் பணி 5-வது நாளாகத் தொடரும்நிலையில், போக்சோ குற்றவாளிகள் உள்பட 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, மாயமான சிறுமி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக விழுப்புரம் வடமேற்கு மாவட்டச் செயலாளர் குணசரவணன் அறிவித்துள்ளார்.பெரியார் அறிவுலகம்! திறந்து வைப்பதில் என்ன பெருமை, உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை: மு.க.ஸ்டாலின்Case of missing 7-year-old girl: Rs. 2 lakh reward for providing information