சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் வென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் உடன் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினார். இந்தப் போட்டியில் 6-4, 6-4 என நேர் செட்களில் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் ஸ்வெரெவ் தொடர்ச்சியாக 3 கேம்களை வென்றார். சர்வீஸ் மூலமாக 10 கேம்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வெரெவ் ஸ்பானிஷ் வீரர் அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா உடன் வரும் சனிக்கிழமை மோதவிருக்கிறார். அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா தனது காலிறுதிப் போட்டியில் அர்துர் கீ உடன் மோதினார். இதில் காயம் காரணமாக அர்துர் வெளியேற, அலீஸான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினா அரையிறுதிக்கு முன்னேறினார். போட்டித் தரவரிசையில் ஸ்வெரெவ் 2ஆவது இடத்திலும் டேவிடோவிச் ஃபோகினா 25ஆவது இடத்திலும் இருக்கிறார் இந்தாண்டின் இறுதியில் ஸ்வெரெவ் முதலிடத்துக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், ஆடவர் ஒற்றையா் பிரிவில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சமீபத்தில் சாம்பியன் ஆனதும் குறிப்பிடத்தக்கது. Can't stop Sascha ♂️A 6-4 6-4 win over De Minaur takes Zverev into the Shanghai semis!@AlexZverev #RolexShanghaiMasters pic.twitter.com/0g4LHgtedN— Tennis TV (@TennisTV) October 15, 2026அழிவில்லாத புகழ்..! ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ரோம் ரசிகர்களின் அன்பைப் பெறக் காரணம் என்ன? Alexander Zverev cruises past De Minaur to reach Shanghai semi-finals