கவின் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Wait 5 sec.

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய இவரை கடந்தாண்டு ஜூலை 27- ஆம் தேதி பாளையங்கோட்டை கேடிசி.நகரில் மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் சகோதரா் சுா்ஜித், இவரது பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளா்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, உறவினா் ஜெயபால் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.இதனிடையே, கைது செய்யப்பட்ட சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோா் மீது விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஆதாரங்கள் எனக் கூறி, அவர்கள் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து, இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.இந்த நிலையில், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கவினின் பெற்றோர் சந்திரசேகர் - தமிழ்ச்செல்வியின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.போஸ்டரை பார்த்து வாகனத்தை நிறுத்திய விஜய்! சிறுமிக்கு உதவுவதாக உறுதி!TN government has filed an appeal in the Supreme Court against the quashing of the charge sheet against those arrested in the honor killing case of Kavin