கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில், ரூ. 729 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான திரைப்பட நகரம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கன்னடத் திரைப்படத்துறை சமீபகாலமாகத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. கே.ஜி.எஃப்., காந்தாரா போன்ற படங்கள் விருதுகளைக் குவித்ததுடன் வசூல் ரீதியாகவும் சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தாலுக்காவில் ரூ. 729 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான திரைப்பட நகரம் உருவாக்கப்படவுள்ளது. திரைப்படத் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு உள்கட்டமைப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் இம்மாவு தொழிற்பேட்டையில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திரைப்பட நகரம் அமைக்கப்படவுள்ளது. இத்துடன், மகாதேவபுரா, யஸ்வந்த்பூர் மற்றும் பயத்தாராயணபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ரூ.90 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.சிஜேபி போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!The Karnataka state cabinet has approved the establishment of an international-standard film city in the Mysuru district, at a cost of Rs 729 crore.