எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ! சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் கனிமொழி

Wait 5 sec.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றார். போராட்டத்தில் பேசிய அவர், "நாட்டில் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியது அனைத்துமே கண்துடைப்பாக இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் விவகாரத்தில் பாஜக சார்பில் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுகிறார். இதில் இருவர் எடுக்கும் முடிவே இறுதியானது. பாஜக சார்பில் இருவர் தேர்வு செய்யும் நபரே தலைமைத் தேர்தல் ஆணையர். ஏதாவது ஒரு பிரச்னை நடக்கும்போது இந்த நாட்டின் உயர் நிலையில் இருப்பவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். அனைத்தும் நடந்துமுடிந்த பிறகு தான் பேசுவார்கள். எஸ்ஐஆர் நடைமுறையால் 13 கோடி குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்திருக்கிறார்கள். 74 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை எல்லாம் மீட்டுத் தரதான் இந்த போராட்டம்" என்று பேசினார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார். Gyanesh, its done bro pic.twitter.com/gGVWDJ07DG— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 16, 2026Gyanesh, its done bro: Kanimozhi at the youth protest in Chennaiகோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!