காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு!

Wait 5 sec.

கனமழை காரணமாக, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ரயில் தடத்தில் பூசிவாக்கம் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்களாகக் கடும் மழை பெய்து வருகிறது. இன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கடும் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் ரயில் தடத்தில் பூசிவாக்கம் அருகே எல்.சி-21 பகுதியில் கடந்த நான்கு மாதங்களாகச் சப்வே பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு மாலையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ரயில் நிலையங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கடற்கரையிலிருந்து காஞ்சிபுரம் வந்த ரயில்கள் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலும், திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காஞ்சிபுரத்திலும் நிறுத்தப்பட்டன.இதனால் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்தது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் அரக்கோணம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் சென்னை செல்ல வழிவகை செய்யப்பட்டது.இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து இயங்க வேண்டிய 3 ரயில்களும், திருமால்பூரிலிருந்து இயங்க வேண்டிய 1 ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது ரயில்வே பணியாளர்கள் சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். Due to heavy rains, soil erosion occurred near Poosivakkam on the Kanchipuram-Chengalpattu railway section, disrupting train services.சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!