அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் யோசித்து செயல்பட வேண்டும்: மோர்னே மோர்க்கல்

Wait 5 sec.

அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையே நான்கு போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (அக்டோபர் 17) நடைபெறுகிறது.இந்த நிலையில், அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு போட்டிகளுக்கு நடுவே அதிகம் பயிற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இருக்காது. முந்தைய போட்டிகளில் நடந்தவற்றை யோசிக்காமல் அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் வீரர்களுடன் அமர்ந்து சிறிது ஆலோசனையில் ஈடுபட்டோம். பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழுத்தமான சூழலில் புத்திசாலித்தனமாக யோசித்துப் பந்துவீச வேண்டும்.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் எங்களது பந்துவீச்சு குழுவுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பிரின்ஸ் யாதவ் அவரது பந்துவீச்சு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறார். அவருடைய பலம் என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார். Indian team bowling coach Morne Morkel has stated that bowlers need to make intelligent decisions in high-pressure situations.இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் வழிகாட்டியாக இருப்பார்: ஸ்மிருதி மந்தனா