ஆந்திரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.அமராவதியில் உள்ள முதல்வர் இல்லத்தில் இருந்து இருவரும் ஒரே காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகைப் புரிந்தனர். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் இன்று ஆந்திரத்திற்குச் சென்றுள்ளார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்றுள்ளார் முதல்வர் விஜய்.அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.இதன் பிறகு, அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்தும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பு குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை அடுத்து விஜயவாடாவில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் பங்கேற்றார். இருவரும் ஒரே காரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல். முருகன்!Navaratri celebrations in Andhra! Chief Minister Vijay participates alongside Chandrababu Naidu