புதுதில்லி: ரூபாயின் மதிப்பு உயர்வு ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியதால், இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை தலைநகர் தில்லியில் தொடர்ந்து 2 வது நாளாக சரிந்து, 10 கிராமுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1.52 லட்சமாக விற்பனையானது.அனைத்திந்திய சரஃபா சங்கத்தின் தகவலின் அடிப்படையில், 99.9 சதவீதத் தூய்மையான தங்கத்தின் விலை, இன்று 10 கிராமுக்கு ரூ. 1,53,000 லிருந்து ரூ. 400 குறைந்து, அனைத்து வரிகளும் உள்பட ரூ. 1,52,600 ஆக குறைந்தது.அதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு, முந்தைய நாள் நிலையிலிருந்து ரூ. 500 குறைந்து ரூ. 2,26,000 ஆக விற்பனையானது.அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான உடனடித் தேவையை குறைப்பதற்கும், அதிகப்படியான வர்த்தக நிலையை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் அடிப்படையில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக வலுவடைந்தது வருகிறது.Gold prices fell for the second straight session, declining Rs 400 to Rs 1.52 lakh per 10 grams in Delhi.பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் 2வது காலாண்டு விற்பனை 20% அதிகரிப்பு!