புதிய ஹூண்டாய் பயோன் எஸ்யூவி அறிமுகம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய பயோன் எஸ்யூவியின் இந்தியாவுக்கான மாடல்.ஹூண்டாய் பயோன் காரில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.ஹூண்டாய் பயோன் எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.குரல் உரையாடல்களைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம், மேம்பட்ட வழிகாட்டி வசதி மற்றும் ஏர் அப்டேட் ஆகிய நவீன யுக தொழில்நுட்ப அம்சங்களை ஹூண்டாய் வழங்கியுள்ளது.காரின் உட்புறத்தில் 12.3 அங்குல அளவிலான இரண்டு வளைந்த டிஜிட்டல் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. என்விடியா தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கனெக்டட் கார் நேவிகேஷன் காக்பிட் வசதி, வழிகாட்டி அமைப்பு, மொபைல்போனுடன் இணைக்கப்பட்ட சேவைகள் மற்றும் எளிமையான கட்டுப்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் இது செயல்படும்.