இசையமைப்பாளர் தேவா மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு! முதல்வர் விஜய் இரங்கல்

Wait 5 sec.

பிரபல திரை இசையமைப்பாளர் தேவா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளரும் பாடகருமான தேவா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறப்புச் செய்தியறிந்த ஏராளமான திரைத்துறையினர் கண்ணீருடன் தேவா இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.தேவா மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது உடல் இல்லத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. திரையுலகினரும், முக்கிய தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.தேவா மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.— CMOTamilNadu (@CMOTamilnadu) October 17, 2026 இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.