ஆயுத பூஜை! பூக்களின் விலை கடும் உயர்வு! கனகாம்பரம் கிலோ ரூ. 2,000!

Wait 5 sec.

ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் பூக்காரத் தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குத் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லாரிகளில் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும். இந்த நிலையில், நாளை மறுநாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கனகாம்பரம் பூ பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகின. இதேபோல் முல்லை ரூ. 1100, செவ்வந்தி ரூ. 300, ஆப்பிள் ரோஸ் ரூ. 300, சம்பங்கி ரூ. 300, பன்னீர் ரோஸ் ரூ. 200, அரளி ரூ. 500, கோழி கொண்டை ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாளை இதைவிடப் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.