இசையமைப்பாளர் தேவா இறப்பு குறித்து நடிகர், இயக்குநர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, “எந்தப் பின்புலமும் இல்லாமல் கலைத் துறையில் வெற்றிச் சிகரங்களைத் தொட்டவர்” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான மீசைய முறுக்கு 2 படத்தில் கானா பாடல்கள் குறித்தும் அதன் எழுச்சி குறித்தும் ஹிப்ஹாப் ஆதி பேசியிருப்பார். இந்த நிலையில், தேவா மறைவுக்கு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத் துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது. எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும்… pic.twitter.com/Vg3nF0OOVf— Hiphop Tamizha (@hiphoptamizha) October 17, 2026துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் டீசர்!Deva reached the pinnacle of success without any backing: Hiphop Tamizha